sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முடிந்தால் என்னை தடுப்பு காவலில் வையுங்கள்: பா.ஜ.,வுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சவால்

/

முடிந்தால் என்னை தடுப்பு காவலில் வையுங்கள்: பா.ஜ.,வுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சவால்

முடிந்தால் என்னை தடுப்பு காவலில் வையுங்கள்: பா.ஜ.,வுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சவால்

முடிந்தால் என்னை தடுப்பு காவலில் வையுங்கள்: பா.ஜ.,வுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சவால்


UPDATED : ஜூலை 17, 2025 08:18 AM

ADDED : ஜூலை 17, 2025 01:40 AM

Google News

UPDATED : ஜூலை 17, 2025 08:18 AM ADDED : ஜூலை 17, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: பா.ஜ., ஆளும் மாநிலங்களில், 'பெங்காலி' மொழி பேசும் மக்கள் குறிவைத்து துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''இனி பெங்காலியிலேயே பேசுவேன். முடிந்தால், என்னை தடுப்பு காவலில் வையுங்கள்,'' என பா.ஜ.,வுக்கு சவால் விடுத்தார்.

திடீர் திருத்தம் ஏன்?

வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பெங்காலி மொழியைத் தான் பேசுகிறார்கள். அவர்களில் 50 லட்சம் பேர் மேற்கு வங்கம், பீஹார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வசிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இப்படி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் புகுந்தவர்களுக்கு அந்த மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை தாராளமாக அள்ளி வழங்கி விடுகின்றன.

அதுவும் மேற்கு வங்க மாநில மக்களும் பெங்காலி மொழி பேசுவதால், சட்டவிரோத குடியேறிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. ரேஷன் கார்டு அடிப்படையில் அவர்கள் டிரைவிங் லைசென்ஸ், காஸ் இணைப்பு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை எளிதில் பெற்று விடுகின்றனர். அவற்றை ஆதாரமாகக் காட்டி ஆதார் அட்டையும் பெற்று விடுகின்றனர்.

இதன் காரணமாக, இவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு நம்பிக்கை மிகுந்த வாக்காளர்களாக உள்ளனர். இந்த சட்டவிரோத செயலை முடிவுக்கு கொண்டு வரவே வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது பா.ஜ., ஆளும் ஒடிஷா, டில்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்டனம்


இந்த நடவடிக்கைக்கு, திரிணமுல் காங்., கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெங்காலி பேசும் மக்களுக்கு எதிரான பா.ஜ., ஆளும் மாநில அரசுகளின் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது.

இதன் பின், பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்திய பா.ஜ., அரசின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சி ஆளும் மாநிலங்களில் பெங்காலி பேசும் மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.,வின் இந்த மலிவான அரசியலால் நான் வெட்கப்படுகிறேன்; வருத்தப்படுகிறேன்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு முறையான ஆதார், வாக்காளர் அட்டை உள்ளன. அப்படியிருக்கையில், சட்ட விரோத குடியேறிகள் எனக் கூறி அவர்களை எப்படி கைது செய்ய முடியும்?

பெங்காலி பேசுகின்றனர் என்பதற்காக அவர்களை கைது செய்வதை ஏற்க முடியாது. அப்படி என்றால், இனி நான் பெங்காலியிலேயே அதிகம் பேசுவேன். முடிந்தால் என்னை கைது செய்து தடுப்பு காவலில் அடைத்து பாருங்கள்.

கைவிட வேண்டும்


மேற்கு வங்க மக்களை இப்படி துன்புறுத்தவும், அவர்களை கைது செய்யவும், வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பவும் பா.ஜ.,வுக்கு என்ன உரிமை இருக்கிறது?

மேற்கு வங்கம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பெங்காலி நம் நாட்டின் மொழி இல்லையா? இந்த மக்கள் விரோத போக்கை பா.ஜ., உடனடியாக கைவிட வேண்டும். இல்லை எனில், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் மையமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.






      Dinamalar
      Follow us