ADDED : டிச 31, 2024 05:28 AM
பெங்களூரு: தொடர் பணி அழுத்தத்தால், சோர்வடைந்துள்ள முதல்வர் சித்தராமையா ஜனவரி 2 வரை ஓய்வெடுக்க முடிவு செய்துஉள்ளார்.
கர்நாடகாவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், முதல்வர் சித்தராமையா ஓய்வின்றி பணியாற்றினார். தொடர்ந்து பிரசாரம் செய்தார்; பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்; மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சமீபத்தில் பெலகாவியின் சுவர்ண விதான் சவுதாவில் நடந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றார். அதன்பின் காங்கிரஸ் மாநாட்டின் நுாற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
டில்லியில் நடந்த, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதுபோன்று தொடர் நிகழ்ச்சிகளால், முதல்வர் சித்தராமையா சோர்வடைந்துள்ளார். அவரை ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். எனவே ஜனவரி 2 வரை, ஓய்வெடுக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். அதுவரை அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார்.