அரசியல் சாசன அச்சுறுத்தல் எதிர்க்க முதல்வர் அழைப்பு
அரசியல் சாசன அச்சுறுத்தல் எதிர்க்க முதல்வர் அழைப்பு
ADDED : ஜன 02, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ''அரசியல் சாசனத்தை அச்சுறுத்துபவர்களை இரக்கமின்றி எதிர்க்க வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் நேற்று நடந்த விஸ்வகர்மா சமுதாய விழாவை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
அரசியல் அமைப்பு சட்டத்தை படித்து புரிந்து கொண்டு, அதன்படி பின்பற்ற வேண்டும். அரசியல் அமைப்பை எதிர்ப்பவர்கள், சமூகத்தில் மாற்றத்தை விரும்புவதில்லை. அரசியல் சாசனத்தை அச்சுறுத்துபவர்களை இரக்கமின்றி எதிர்க்க வேண்டும்.
அரசியல் அமைப்பின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். வரலாற்றறை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வரலாறு தெரியாதவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

