ADDED : ஜன 22, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: முதல்வர் சித்தராமையா நல்லவர்தான். ஆனால் இப்போது மாறிவிட்டார், என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியின், காகவாடாவில் நேற்று அவர் கூறியதாவது:
முதல்வர் சித்தராமையா, மிகவும் நல்லவர்தான். ஆனால் 2018ல் இருந்ததை போன்று, இப்போது இல்லை; மாறிவிட்டார். கோத்வால் சீடன் - சிவகுமார் - துணை முதல்வராகியுள்ளார். எனவே சித்தராமையாவுக்கு மதிப்பில்லை.
கோத்வால் சீடன் முதல்வராகியிருந்தால், எங்களின் சொத்துகள் அவரது பெயருக்கு போயிருக்கும். கடவுளின் புண்ணியம், இவர் முதல்வராகாமல், சித்தராமையா முதல்வரானார்.
சவுபாக்யா தொழிற்சாலை பெயரில், கடன் பெற்ற விஷயமாக என் மீது வழக்கு பதிவாகியுள்ளது. கோத்வால் சீடன் என் மீது 420 வழக்கு பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.