சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதி 2.92 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு
சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதி 2.92 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு
ADDED : மார் 08, 2024 02:18 AM
சிக்கபல்லாபூர்: கடந்த 10 ஆண்டுகளில், சிக்கபல்லாபூர் வாக்காளர்கள் எண்ணிக்க 2.92 லட்சம் உயர்ந்துள்ளது.
சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதிக்குள் சிக்கபல்லாபூர், கவுரிபிதனுார், பாகேபள்ளி, பெங்களூரு நகர மாவட்டத்தின் எலஹங்கா, பெங்களூரு ஊரக மாவட்டத்தின் தொட்டபல்லாபூர், ஹொஸ்கோட், தேவனஹள்ளி, நெலமங்களா ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 16 லட்சத்து, 58 ஆயிரத்து, 39 வாக்காளர்கள் இருந்தனர். இம்முறை இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 19 லட்சத்து, 50 ஆயிரத்து, 443 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிகபட்சமாக எலஹங்கா சட்டசபை தொகுதியில், ஆண்கள் இரண்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 311 ஆண்களும்; இரண்டு லட்சத்து, 19 ஆயிரத்து, 473 பெண்கள், 77 திருநங்கையர்கள் என, மொத்தம் நான்கு லட்சத்து, 45 ஆயிரத்து, 861 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், நடப்பாண்டு ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 402 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

