ADDED : நவ 15, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச் சங்க காமராஜர் உயர்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசினார். பள்ளி ஆசிரியர்களும் மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் ரவீந்திரன் பங்கேற்றார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்ற நுால், பள்ளி தாளாளரிடம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை, முன்னாள் தலைமை ஆசிரியர் ஆசிர்வாதம் தொகுத்து வழங்கினார்.