அடுத்த 3 நாட்களில் மீண்டும் வெள்ள அபாயம்: நேபாளத்துக்கு எச்சரிக்கை விடுத்தது சீனா
அடுத்த 3 நாட்களில் மீண்டும் வெள்ள அபாயம்: நேபாளத்துக்கு எச்சரிக்கை விடுத்தது சீனா
UPDATED : ஆக 27, 2026 09:04 PM
ADDED : ஆக 27, 2026 08:12 PM
காத்மாண்டு: அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் ஒரு வெள்ளம் தாக்கக் கூடும் என, நேபாளத்தை சீனா எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று முன்தினம், பனிப்பாறை சரிவால் உருவான திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் பெரும் நிலச்சரிவு, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் புதிதாக ஒரு பெரிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளதாக சீனா கூறியுள்ளது.
நேபாள எல்லைக்கு அருகே உள்ள சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்துக்கு அருகே இந்த பெரிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு ஏற்கனவே 7.6 கோடி கன அடியை தாண்டி, தற்போது வழிந்து கொண்டிருக்கிறது. அடுத்த மூன்று நாட்களில், மேலும் 10.60 கோடி கன அடி தண்ணீர் அதில் சேரும் என கணிக்கப்பட்டுள்ளது-.
இத்தடுப்பு ஏரி எதிர்பாராதவிதமாக உடைந்தால், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள பகுதிகள் மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.
மீட்கும் பணி தீவிரம்! நேபாள - திபெத் எல்லை பகுதியான ராசுவாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதில், 300 இந்தியர்களும் அடங்குவர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஷிஷிர் கனால் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர்
