ADDED : ஆக 09, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேற்று அளித்த பதில்:
கடந்த 1962ல் சீனாவுடன் நடந்த மோதலுக்கு பின் நம் நாட்டின் எல்லையில் 38,000 சதுர கி.மீ., நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் 1988ல் சீனா சென்றார். எல்லைப் பிரச்னையை தீர்க்க கூட்டுப் பணிக்குழு உருவாக்கப்பட்டது.
இந்த குழுவினர், 1989 - 2005 இடையே 15 சுற்று பேச்சு நடத்தினர். மேலும், பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, 2003ல் சீனா சென்றார். அப்போது எல்லை பிரச்னையை தீர்க்க சிறப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். இருதரப்பும் நடத்திய பேச்சு அடிப்படையில், 2005, ஏப்., 11ல் இந்தியா - சீனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இவ்வாறு அவர் கூறினார்.