sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதி

/

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதி

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதி

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதி

7


UPDATED : ஏப் 06, 2024 01:10 PM

ADDED : ஏப் 06, 2024 11:36 AM

Google News

UPDATED : ஏப் 06, 2024 01:10 PM ADDED : ஏப் 06, 2024 11:36 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய லோக்சபா தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதி திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு திடுக்க தவகல் வெளியாகி இருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவன தரப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் ஒரு தகவல் பரவி உள்ளது. இந்தியா நாட்டின் ஜனநாயக திருவிழா வரும் ஏப்-19 ல் துவங்குகிறது. ஜூன் மாதம் வரை பல கட்டங்களாக இந்த ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை சுவர்விளம்பரம், ஒலிபெருக்கி விளம்பரம் தாண்டி, சமூகவலை தளங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது.

வேட்பாளர்கள் , கட்சி தரப்பில் விளம்பரங்கள், மீம்ஸ், வீடியோ என பெரும் அளவில் மக்களை விரைவில் சென்றடைகிறது. நல்லதோ, கெட்டதோ விரைவில் இந்த வைரல் பல லட்சம் பேரை சென்றடைகிறது. இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு என்ற ( Artificial Intelligence ) A I தொழில்நுட்பத்ததால் குழப்பம் விளைவிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 64 நாடுகளில் இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 19 துவங்கி 7 கட்டங்களாக லோக்சபாவுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

சைபர் குழுக்கள்


இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீனாவின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் 2024 ல் நடக்கும் பல்வேறு பொதுத்தேர்தல்களை குறிவைத்துள்ளது. இதற்கு வடகொரியாவின் ஆதரவும் உண்டு. இந்த தேர்தலின் போது நிலவும் பொதுக்கருத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பரவ வைக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் தென் கொரியா நாடுகளில் முக்கிய தேர்தல் நடைபெறுவதால், தனது நலனுக்கு பயனளிக்கும் வகையில் இதனை செயல்படுத்தும் திட்டத்தில் சீனா உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சோதனை


இது தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகள் கூறுகையில்,‛டீப் பேக்' மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதுபோன்ற தவறான விளம்பரங்கள் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொது மக்களிடையே பரப்பி அவர்களை தவறாக வழிநடத்தும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைதொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இது காலப்போக்கில் அந்நாட்டிற்கு பெரிய பயனளிக்கும். தைவானில் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக சீனா இதனை சோதித்து பார்த்துள்ளது. அங்கு போலியான தகவல்களை பரப்பியது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி கவலை

!கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அளித்த ஒரு பேட்டியில் , ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆபத்தாக உள்ளது. இதில் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது என கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us