தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டில்லியில் டிச.22 முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்; சீன தூதரகம் அறிவிப்பு

டில்லியில் டிச.22 முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்; சீன தூதரகம் அறிவிப்பு

டில்லியில் டிச.22 முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்; சீன தூதரகம் அறிவிப்பு


ADDED : டிச 08, 2025 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 04:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவில் உள்ள சீன தூதரகம் டிச.22ம் தேதி ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை தொடங்குகிறது.

இந்தியாவுக்கான சீன தூதரர் ஜூபெய்ஹோங் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறையானது இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் டிசம்பர் 22, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம்.

மேலும் விவரங்களுக்கு புதுடில்லியில் உள்ள சீன விசா விண்ணப்ப சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அதன் அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மதியம் 3 வரை அணுகலாம்.

வேறு ஏதேனும் தகவல்களுக்கு +91-9999036735 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஜூபெய்ஹோங் தமது பதிவில் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us