டில்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ -அஜித் தோவல் சந்திப்பு
டில்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ -அஜித் தோவல் சந்திப்பு
UPDATED : ஆக 19, 2025 12:51 PM
ADDED : ஆக 19, 2025 12:08 PM

புதுடில்லி: இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் பின் நான்கு ஆண்டுகள் கழித்து, கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில், கசான் சென்றிருந்த பிரதமர் மோடி, சீன அதிபரை சந்தித்து பேசியிருந்தார். இதனால், இரு நாட்டுக்கும் இடையே துண்டிக்கப்பட்ட உறவு மீண்டும் துளிர்விட்டது.
இதைத் தொடர்ந்து, இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 19) வாங் யீ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைகள் குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர்.
வரும் காலத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.