ADDED : அக் 18, 2024 07:25 AM

பெங்களூரின் சின்னசாமி விளையாட்டு அரங்கம், கிரிக்கெட் பிரியர்களின் சொர்க்கமாகும். தற்போது இந்த விளையாட்டு அரங்கத்தில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
இந்தியாவின் முக்கியமான கிரிக்கெட் விளையாட்டு அரங்கங்களில், பெங்களூரின் சின்னசாமி விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும். 1969ல் கட்டப்பட்டது. 1977 முதல் 1980 வரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணைய தலைவராக இருந்த சின்னசாமியின் பெயர், விளையாட்டு அரங்கத்துக்கு வைக்கப்பட்டது. இங்கு 1974ல் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது.
பெங்களூரின் இதய பகுதியில் சின்னசாமி விளையாட்டு அரங்கம் வாஸ்து முறைப்படி வட்ட வடிவமாக உள்ளது. அழகான விளையாட்டு அரங்கம், பல கிரிக்கெட் போட்டிகளை கண்டுள்ளது. மகிழ்ச்சியான தருணங்களுக்கு சாட்சியாக நின்றுள்ளது. தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கிரிக்கெட் பிரியர்களுக்கு விருப்பமான இடமாகும். 35,000 இருக்கைகள் திறன் கொண்டதாகும்.
ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கும் போது, கிரிக்கெட் பிரியர்கள் பெருமளவில் வருவர். சின்னசாமி விளையாட்டு அரங்கத்தில் விளையாடிய, சச்சின் டெண்டுல்கர் உட்பட பல பேட்ஸ் மேன்கள், செஞ்சுரி அடித்துள்ளனர். அவர்களின் பெயர், கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு விளையாட்டுகள் நடப்பதுடன், கிரிக்கெட் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாம்களும் நடத்தப்படுகின்றன.
சின்னசாமி விளையாட்டு அரங்கில், உலக கோப்பை போட்டிகளும் நடந்துள்ளன
. - நமது நிருபர் -