தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்

மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்

மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்


ADDED : செப் 01, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருப்பவர் சிராக் பஸ்வான். லோக்ஜனசக்தி கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் ஆவார்.

அவருக்கு வந்த மர்ம கடிதம் ஒன்றில், பயங்கரவாதிகள் வாயிலாக கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மிரட்டல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், தேவையான நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அனுப்பியது தனி நபரா அல்லது அமைப்பா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. மத்திய உளவுத்துறையினர் இந்த மிரட்டல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலுக்கு முன்பும், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் வாயிலாக சிராக் பஸ்வானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us