டில்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் ஊழியர் தற்கொலை
டில்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் ஊழியர் தற்கொலை
ADDED : மார் 07, 2025 07:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., பெண் ஊழியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விமான நிலையத்தில் 3வது முனையத்தில் உள்ள கழிவறையில், பணி நிமித்தம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கி மூலம் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.