இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரங்கள்; 'டாப் 10' பட்டியல் இதோ!
இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரங்கள்; 'டாப் 10' பட்டியல் இதோ!
ADDED : நவ 24, 2024 10:43 AM

புதுடில்லி: இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் 10 நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகாவில் இரண்டு நகரங்களும், தமிழகத்தில் ராமநாதபுரமும், இடம்பிடித்து உள்ளன.
பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் துவங்கியதைத் தொடர்ந்து, முக்கிய நகரங்கள், குறிப்பாக வட இந்தியா முழுவதும், தற்போது கடும் காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கின்றன. காற்று மாசுபாடு இல்லாத அல்லது குறைந்த அளவே மாசுபாடு உள்ள டாப் 10 நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள 'டாப் 10' தூய்மையான நகரங்கள் பட்டியல் இன்று (நவ.,24) வெளியானது.
நகரம் (மாநிலம்)- காற்றின் தரக்குறியீடு- வகை
1. ஐஸ்வால் (மிசோரம்)- 50- நல்லது.
2. பாகல்கோட் (கர்நாடகா)- 46- நல்லது.
3. சாமராஜநகர் (கர்நாடகா)- 44- நல்லது.
4. கவுகாத்தி (அசாம்)- 82- திருப்திகரமானது.
5. கொல்லம் (கேரளா)- 61- திருப்திகரமானது.
6. நாகோன் (அசாம்)- 56- திருப்திகரமானது.
7. ராமநாதபுரம் (தமிழகம்) 68- திருப்திகரமானது.
8. ரிஷிகேஷ் (உத்தரகண்ட்) - 73- திருப்திகரமானது.
9. ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)- 80- திருப்திகரமானது.
10. திருச்சூர் (கேரளா)- 50 - திருப்திகரமானது.
டில்லியில் இன்று மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. காற்றின் தரம் 366 ஆக மிகவும் மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்று தரக்குறியீடு
பூஜ்யம் முதல் 50 - சிறப்பு
51 முதல் 100 வரை - திருப்திகரமானது
101 முதல் 200 வரை - மிதமானது
201 முதல் 300 வரை - மோசமானது
301 முதல் 400 வரை - மிகவும் மோசமானது.