சிஜேபி விவகாரம்: உணர்ச்சிவசப்பட வேண்டாம் என தலைமை நீதிபதி அறிவுரை
சிஜேபி விவகாரம்: உணர்ச்சிவசப்பட வேண்டாம் என தலைமை நீதிபதி அறிவுரை
ADDED : மே 25, 2026 04:20 PM

புதுடில்லி: சிஜேபி எனப்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்பாக வழக்கறிஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம் என தலைமை சூர்யகாந்த் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்கள் சிலர் கரப்பான்பூச்சிகள் போன்று மீடியா, சமூகஊடகங்களில் ஊடுருவி நீதித்துறையை ஒட்டுண்ணி போல் தாக்கி வருவதாக வாய்மொழியாக கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கமளித்த சூர்யகாந்த், தனதுகருத்து தவறாக திரித்து கூறப்பட்டுள்து. போலியாக மற்றும் பொய் பட்டம் பெற்றவர்களை தான் கூறியதாகவும்,இளைஞர்களை விமர்சிக்கவில்லை என தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆன்லைனில் காக்ரோச் ஜனதா கட்சி( சிஜேபி) என்ற பெயரில் கட்சி துவங்கப்பட்டது. இந்த பக்கத்தை தடை செய்யும்படி மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் வாய்ணொழியாக கூறியதை வைத்து வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிஜேபி நடவடிக்கைகள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் விஎம் பஞ்சோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞர் என்கே கோஸ்வாமி வாதாடுகையில், ஆன்லைன் செயல்பாட்டால் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது எனத் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி இதனை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக்கொண்டு எதிர்மறை வினையாற்ற வேண்டாம் எனத் தெரிவித்தார்.
