காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
ADDED : ஏப் 24, 2025 10:30 AM

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்., எனப்படும், 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு.
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆன்லைன் வாயிலாக பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பதை இந்த அமைப்பினர் முக்கிய பணியாக செய்து வருகின்றனர். போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் போன்றவற்றிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்கள், பாதுகாப்பு படையினர், முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் மீது தாக்குதல் நடத்திய இந்த எதிர்ப்பு முன்னணி அமைப்பு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வாயிலாக பராமரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

