மாணவர்களுக்குள் மோதல்; சமாதானம் பேசிய தலைமை ஆசிரியை மீது தாக்குதல்!
மாணவர்களுக்குள் மோதல்; சமாதானம் பேசிய தலைமை ஆசிரியை மீது தாக்குதல்!
ADDED : நவ 26, 2024 08:19 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை, பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் மீது தாக்குதல் நடத்திய 8 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பூவாச்சலில் அரசு தொழிற்கல்வி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் இடையே பிரச்னை இருந்து வந்தது. இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் நோக்கத்துடன் பள்ளி நிர்வாகம் சார்பில், கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் பிரியா மற்றும் பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் ராகவ் லால் ஆகியோர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தலைமையாசிரியை பிரியாவுடன் கடுமையான வாக்குவாதம் செய்த மாணவர்கள் திடீரென அவரை தாக்க ஆரம்பித்தனர். தடுக்க முற்பட்ட பெற்றோர்- ஆசிரியர் சங்க அனைவருக்கும் சரமாரியாக அடி உதை விழுந்தது.
இது தொடர்பாக, 8 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தகராறு தொடர்பாக 18 மாணவர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரளா பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.