தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மும்மொழி கொள்கையில் 6ம் வகுப்புக்கு விலக்கு

மும்மொழி கொள்கையில் 6ம் வகுப்புக்கு விலக்கு

மும்மொழி கொள்கையில் 6ம் வகுப்புக்கு விலக்கு


ADDED : செப் 29, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சிறப்பு நிருபர் -

'சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டது. மேலும், கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ., 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயம் என்பதை எதிர்த்து மாணவர், பெற்றோர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாணவர்களின் கற்றல் திறன், புதிய மொழியை கற்பதில் உள்ள சவால்கள் மற்றும் கல்வி சுமையை மத்திய அரசும், சி.பி.எஸ்.இ.,யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மும்மொழி கொள்கையை உடனடியாக திணிக்க முயற்சிக்காமல், படிப்படியாக அமல்படுத்துவது தான் மாணவர்களுக்கும் உகந்ததாக இருக்கும்.

ஏற்கனவே 7-ம் வகுப்புக்கு மும்மொழிக் கொள்கையை உடனடியாக கட்டாயமாக்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே அடிப்படையில், 6ம் வகுப்புக்கும் நடப்பு கல்வியாண்டில் விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us