தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்


ADDED : ஜூன் 29, 2025 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 08:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேராடூன்: உத்தரகண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஹோட்டல் தளத்தில் தங்கியிருந்த தொழிலாளர் 9 பேர் மாயம் ஆகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பர்கோட்-யமுனோத்ரி சாலையில் உள்ள பாலிகரில் மேக வெடிப்பு ஏற்பட்டது. குறைந்த நேரத்தில் மேகங்கள் கூடி, வீரியம் மிக்க மழை பொழிந்தால் அதுவே மேகவெடிப்பு எனப்படும். இந்த அதீத மழை பொழிவால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை நிகழ்கிறது.

மேகவெடிப்பில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஹோட்டல் தளத்தில் தங்கியிருந்த தொழிலாளர் 9 பேர் மாயம் ஆகி உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் போலீசார் விரைந்துள்ளனர். தற்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us