பிரதமர் பற்றி பேச முதல்வருக்கு உரிமை இல்லை: முருகன்
பிரதமர் பற்றி பேச முதல்வருக்கு உரிமை இல்லை: முருகன்
ADDED : பிப் 09, 2024 11:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர் மோடி பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை என மத்திய அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் பற்றிப் பேச முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் இல்லை. மத்திய அரசும், பிரதமர் மோடியும் தமிழகம் மீது அக்கறை செலுத்துகின்றனர். தமிழக மக்கள் மற்றும் கலாசாரம் மீது அன்பு கொண்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. காசி-தமிழ் சங்கமம், பார்லிமென்ட்டில் செங்கோல் நிறுவுதல் போன்றவற்றின் மூலம் நமது பிரதமர் தமிழின் மொழி, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கிறார். இவ்வாறு முருகன் கூறினார்.

