டின்னருக்கு வந்த கரப்பான் பூச்சி: நட்சத்திர ஹோட்டலில் அதிர்ச்சி
டின்னருக்கு வந்த கரப்பான் பூச்சி: நட்சத்திர ஹோட்டலில் அதிர்ச்சி
ADDED : செப் 21, 2026 04:28 PM

-நமது நிருபர்-
மும்பையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடச்சென்ற இருதய சிகிச்சை நிபுணர், டேபிளில் ஊர்ந்து வந்த கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ச்சியடைந்து, சாப்பிடாமலேயே திரும்பிச் சென்றார்.
பிரபல இருதய சிகிச்சை நிபுணரும், போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இருதய நிறுவன தலைவருமான டாக்டர் அசோக் சேத், மும்பை ஜே.டபிள்யூ மரியட் ஹோட்டலில் சாப்பிடச் சென்றார். அவர் சாப்பிட தயாராக இருந்த டேபிளில் உணவு இருந்த தட்டு அருகே கரப்பான் பூச்சி ஒன்று வந்து விட்டது.
அதிர்ச்சியடைந்த அசோக் சேக், அதை அப்புறப்படுத்த முயற்சித்தும் பலனில்லை. 'விரட்டினாலும் போகவில்லை. அதைப்பார்த்தால் பாஸ்தா, பீட்சா சாப்பிட வந்தது போல் தெரியவில்லை' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
கரப்பான் பூச்சியை பார்த்ததால் சாப்பிடும் ஆசையே போய்விட்டதாகவும், டின்னரை முடிக்காமல் அங்கிருந்து அனைவரும் கிளம்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே, சுகாதாரம் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என்கிறார்.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே , நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தை தனது வீடியோவில் 'டேக்' செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதாக ஓட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
