ADDED : அக் 16, 2026 06:14 PM

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி மற்றும் கரப்பான் பூச்சி கும்பல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கடந்த வாரம், மும்பையில் இருந்து டில்லி வந்த கரப்பான் கும்பலின் தலைவனை விமான நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர். மேலும், மக்களின் நலன் கருதி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை விதித்தனர். ஆனால் இத்தடையை மீறி போராடிய கரப்பான் கும்பலை சேர்ந்த அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரப் தாஸ் ஆகியோர் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து கன்னாட் பிளேஸில் போராட்டத்தில் ஈடுபட போவதாக இக்கும்பலின் தலைவன் அபிஜீத் தீப்கே அறிவித்தார்.
இந்நிலையில் டில்லியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற போலீசார், போராட்டத்திற்கு அனுமதி இல்லை. பங்கேற்கக்கூடாது என நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்தனர். மேலும் இக்கும்பலை சேர்ந்த நேஹா போரா உள்ளிட்ட பலரை ஜந்தர் மந்தர் அருகே கைது செய்தனர்.
