sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : நவ 09, 2024 11:03 PM

Google News

ADDED : நவ 09, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பட வாய்ப்புகள்

ரானி வெற்றிக்கு பின், கிரண் ராஜ் நடிப்பில், மேகா திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. நாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் ராஜேஷ் நடரங்கா நடித்துள்ளார். உண்மையான நட்பு மற்றும் காதலுக்கு இடையே உள்ள, சிறிய நுாலிழை வித்தியாசத்தை படத்தில் காண்பித்துள்ளனர். மனித உறவுகளின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கூடிய படமாகும். நாகேந்திர பிரசாத் இரண்டு பாடல்கள், இயக்குனர் சரண் மூன்று பாடல்களை எழுதி உள்ளனர். கிரண் ராஜுக்கு காஜல் குந்தர் ஜோடியாக நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுகிறார். ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்றுள்ளார்.

* டிக்கெட் கட்டணம்

அபிஷேக் ஷெட்டி இயக்கும், ஆராம் அரவிந்த்சாமி திரைப்படம், இம்மாதம் 22ம் தேதி, திரைக்கு வருகிறது. திரையரங்குக்கு ரசிகர்களை ஈர்க்க, படக்குழுவினர் புதிய யுக்தியை கையாள்கின்றனர். முதல் மூன்று நாட்கள் டிக்கெட் கட்டணத்தை 99 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்த் ரெட்டி, ஸ்ரீகாந்த் பிரசன்னா இணைந்து தயாரித்துள்ளார். இதுவரை முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் தென்பட்ட அனிஷ் தேஜஸ்வர், முதன் முறையாக, ஆராம் அரவிந்தசாமி யில் ரொமான்டிக் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மிலனா நாகராஜ் நடித்துள்ளார். கேரள பெண்ணாக தோன்றுகிறார். இவருடன் ஹிருதிகா சீனிவாசும் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார்.

* ஹாட்ரிக் ஹீரோயின்

சில நடிகையர், ஆரம்பத்தில் அதிகமான படங்களில் நடித்து, அதன்பின் காணாமல் போவார்கள். சிலர் குறைந்த படங்களில் நடித்தாலும், கதாபாத்திரங்கள் மூலமாக பேசப்பட்டு, பட வாய்ப்புகளை பெறுவர். இதில் நடிகை ருக்மிணி வசந்த் இரண்டாம் ரகத்தை சேர்ந்தவர். பீர்பல் மூலம் தன் சினி பயணத்தை துவக்கிய இவருக்கு, சப்த சாகரதாச்சே எல்லோ படம், திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் அமோக வெற்றி அடைந்ததால், வேறு மொழிகளிலும் வாய்ப்புகள் தேடி வருகிறது. தற்போது ஹாட்ரிக் ஹீரோயின் என்ற பெயர் பெற்றுள்ளார். தீபாவளி நேரத்தில் இவர் நடிப்பில், பகீரா இரண்டாம் வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில், இவரது இரண்டு படங்கள் திரைக்கு வருகின்றன.

* மறக்க முடியாத நிரோஷா

கன்னடத்தில் தேவராஜுக்கு ஜோடியாக, லாக்கப் டெத் நடித்திருந்த, நடிகை நிரோஷாவை நினைவிருக்கிறதா. தன் போல்டான நடிப்பு, இயல்பான அழகு மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர். கன்னடத்துடன் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கன்னடத்தில் இப்பரு ஹென்டிர முத்தின போலீஸ் உட்பட 10 படங்களில் நடித்துள்ளார். 2013ல் தர்ஷனுடன் பிருந்தாவனா என்ற படத்தில் நடித்தார். அதன்பின் அவர் கன்னடத்தில் நடிக்கவில்லை. 1995ல் நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்ட இவர், நடிப்பை விட்டு ஒதுங்கினார். தற்போது சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கிறார். இவரை கன்னட ரசிகர்கள் இப்போதும் மறக்கவில்லை.

* பிரிந்தது ஏன்?

வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள், அவ்வப்போது திரைக்கு வருகின்றன. அந்த வரிசையில் சந்தோஷ் சங்கீதா வும் சேர்கிறது. நாயகன் அனர்வ் வின்யாஸ், ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார். இவருக்கு போட்டியாளர்களே இல்லை என, நினைத்த நிலையில் நாயகி ராணி வரத், இதே தொழிலில் ஈடுபடுவதால், இருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. இவர்கள் கல்லுாரி நாட்களில் காதலித்து திருமணம் செய்து, விவாகரத்து ஆனவர்கள். இவர்களுக்கு எப்படி திருமணம் நடந்தது; ஏன் பிரிந்தனர்; இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள, படத்தை பார்க்க வேண்டும்.

* 20 தயாரிப்பாளர்

விஜய் ராகவேந்திரா நாயகியாக நடிக்கும், ரிப்பன் சாமி படத்தில், நாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்கிறார். அவரது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், அவரது கதாபாத்திரத்தின் பெயர் மங்களா. இந்த படத்தை 20 பேர் சேர்ந்து தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது. சென்சார் போர்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மலைப்பகுதியில் நடக்கும் சம்பவத்தை சுற்றிலும் திரைக்கதை நகரும். கிரைம், திரில்லர் கதை கொண்டதாகும். சென்சார் போர்டில் இருந்து வந்தவுடன், திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us