sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : டிச 01, 2024 03:56 AM

Google News

ADDED : டிச 01, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*46வது படம்

கடந்த 2022 ஜூலையில், நடிகர் சுதீப் நடித்த விக்ராந்ந் ரோணா திரைக்கு வந்தது. அதன்பின் அவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இவரது நடிப்பில் மேக்ஸ் திரைப்படம் 2023ல் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இன்னும் திரைக்கு வரவில்லை. இப்படம் கன்னடத்துடன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் திரைக்கு வருகிறது. விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான இப்படம், ஆக்ஷன், திரில்லர் கதை கொண்டதாகும். பெரும்பாலான படப்பிடிப்பு, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட செட் போட்டு நடத்தப்பட்டது. டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுதும் திரையிடப்படுகிறது. இது சுதீப்பின் 46வது படம்.

* இறுதி கட்டம்

கன்னடத்தில், குலதல்லி கீள்யாவுதோ என்ற படம், திரைக்கு வர தயாராகிறது. இப்படத்தை சந்தோஷ்குமார் மற்றும் வித்யா தயாரிக்கின்றனர். ராம்நகர் அருகில், சமீபத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளன. மாறுபட்ட கதை கொண்டது. 2025 பிப்ரவரியில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் தயாராகின்றனர். மடனுர் மனு, மவுனா குட்டேமனே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மவுனாவுக்கு இது முதல் படமாகும். நடிகை சோனல் மாந்த்ரோ, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

* ரம்பா கவர்ச்சி ஆட்டம்

ரவிசந்திரன், பிரியங்கா உபேந்திரா இணைந்து நடித்திருந்த மல்லா சூப்பர் ஹிட் படமாகும். தொடர் தோல்வியை சந்தித்து துவண்டு போயிருந்த ரவிசந்திரனுக்கு, இந்த படம் மறு வாழ்வு கொடுத்தது. அதே போன்று இந்த படத்தின் ஒரு பாடல், சர்ச்சைக்கு காரணமானது. பிரியங்காவை மிகவும் கவர்ச்சியாக காட்டியிருந்தனர். இது உபேந்திராவுக்கு பிடிக்கவில்லை. அப்போதுதான் இவரும், பிரியங்காவும் காதலிக்க ஆரம்பித்தனர். எனவே சர்ச்சைக்குரிய பாடலை நீக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி படக்குழுவினர் பாடலை நீக்கினர். படம் திரைக்கு வருவதற்குள், இவர்களின் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அதன்பின் இந்த பாடலை, பாண்டு ரங்கா விட்டலா படத்துக்கு, ரவிசந்திரன் பயன்படுத்தினார். இப்பாடலில் ரம்பா, கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

* முகம் சுழிப்பு

சமீப நாட்களாக நடிகையர் கிளாமராக தோன்றுவது, புதிய விஷயமல்ல. நடிகை நிவேதிதா கவுடாவும், பாடல் ஒன்றில் மிகவும் கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளனர். சிலர் புகழ்ந்து 'கமென்ட்' செய்துள்ளனர்; பலர் முகத்தை சுழித்துள்ளனர். ஏன் இப்படிப்பட்ட உடைகளை அணிகிறீர்கள் என, கேள்வி எழுப்பியுள்ளனர். நிவேதிதா கவுடா, நடிப்பு திறன் உள்ளவர். நடிகர் சந்தன் ஷெட்டியை காதலித்தார். இவர்களின் திருமணம் ஆடம்பரமாக நடந்தது. சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தனர். இப்போது ரீல்ஸ் செய்கிறார். தன் முன்னாள் கணவர் சந்தன் ஷெட்டியுடன், முத்து ராட்சசி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

* அதிர்ஷ்ட ஜோடி

சில ஜோடிகள் இணைந்து நடித்தால், படம் சூப்பர் ஹிட்டாகும் என்பது நம்பிக்கை. இத்தகைய அதிர்ஷ்ட ஜோடிகளில் தனஞ்செயா, அம்ருதா அய்யங்கார் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இணைந்து நடித்த, பாப்கார்ன் மங்கி டைகர்', படவா ராஸ்கல், ஹொய்சளா என மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாகி, வசூலை அள்ளியது. இவர்களின் நடிப்பில், ஜீப்ரா நவம்பர் 22ம் தேதி திரைக்கு வந்து, வெற்றிகரமாக ஓடுகிறது. இது தெலுங்கு படத்தின் ரீமேக். படத்தில் தனஞ்செய், ராட்சத குணம் கொண்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் இணைந்து நடித்த நான்காவது படமும் வெற்றி அடைந்துள்ளது.

* கலக்கும் குத்துப்பாடல்

கன்னட நடிகையருக்கு, தெலுங்கு திரையுலகில், எப்போதுமே அமோக வரவேற்பு இருக்கும். கன்னடத்தில் அறிமுகமாகி, தெலுங்குக்கு சென்ற நடிகை ரஷ்மிகா, இப்போது பாலிவுட்டுக்கு பறந்து, தொடர் வெற்றி படங்களில் நடிக்கிறார். அதே போன்று ஸ்ரீலீலாவும், கன்னடத்தில் இருந்து தெலுங்குக்கு சென்றார். அவர் நடித்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும், நடிப்பு மற்றும் அழகால் அங்குள்ள ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும், புஷ்பா -2 திரைப்படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு, ஸ்ரீலீலா ஆட்டம் போட்டுள்ளார். முதலில் இந்த பாடலுக்கு, பாலிவுட் நடிகையை ஆட வைக்க படக்குழுவினர் ஆலோசித்தனர். இறுதியில் ஸ்ரீலீலாவை தேர்வு செய்துள்ளனர். பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.






      Dinamalar
      Follow us