sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : டிச 14, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 11:09 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* புதுமுகங்கள்

கன்னட திரையுலகில் புதுமுகங்களின் வரவு அதிகரிக்கிறது. இவர்களில் பிரக்ருதி சவுந்தர்யாவும் ஒருவராவார். நடிகர் துனியா விஜய், இயக்கி நடித்த பீமா திரைப்படத்தில், டிராகன் மஞ்சுவுக்கு ஜோடியாக பிரக்ருதி சவுந்தர்யா நடித்திருந்தார். கல்லுாரி நாட்களில் நாடகங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த பாடகியும் கூட. இவரது தோழிகள் நீ அழகாக இருக்கிறாய், பாடுவதற்கு பதிலாக நடிகையாகலாம் என்றனர். தன் தோழியின் உதவியால் டி.வி. தொடரில் நடித்தார். தற்போது திரைப்படங்களில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெறுகிறார். நடிப்பு திறனை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதை, கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

* லேடி சூப்பர்ஸ்டார்

கடந்த ஆறு ஆண்டுக்கு முன், அயோக்யா திரைப்படம் வெளியாகி, வசூலை குவித்தது. இதில் நீனாசம் சதீஷ், ரசிதா ராம் நடித்திருந்தனர். இதே படக்குழுவினர் சேர்ந்து, அயோக்யா - 2 படத்தை தயாரிக்கின்றனர். இந்த படக்குழுவினர் ரசிதா ராமுக்கு, 'லேடி சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்தை அளித்து பாராட்டினார். இப்படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கிலும் தயாரிக்கப்படுகிறது. இதிலும் நீனாசம் சதீஷ், ரசிதா ராம் இணைந்துள்ளனர். முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடக்கிறது.

* போலீஸ் அதிகாரி

பிருத்வி ஆம்பர் மற்றும் தன்யா ராம் இணைந்து நடிக்கும், சவுகிதாரா திரைப்படத்தில், மூத்த நடிகை சுதாராணியும் நடித்துள்ளார். படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முதற் கட்டமாக அந்தமான், நிக்கோபாரில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் மூத்த நடிகர் சாய்குமார், ஸ்வேதா, தர்மா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகை ஸ்வேதா பல ஆண்டுக்கு பின், நடிப்புக்கு திரும்பியுள்ளார். இது மாறுபட்ட காதல் கதை கொண்ட படமாகும்.

* பொங்கல் விருந்து

பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை நாளன்று, கன்னட படங்கள் திரைக்கு வரவில்லை. தமிழ், தெலுங்கு படங்கள் திரைக்கு வரும். கடந்தாண்டு ஜனவரியில் ஒரு கன்னட படம் கூட வெளியாகவில்லை. 2025ன் ஜனவரி 10ம் தேதி, சரண் நடிப்பில், சூமந்தர் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. பொங்கல் வேளையில் மற்ற மொழி படங்களுடன் போட்டி போடுவது கஷ்டம் என்பதால், கன்னட படங்களை திரையிட முன் வருவதில்லை. ஆனால் சூமந்தர் படக்குழுவினர் தைரியத்துடன் படத்தை திரையிட தயாராகின்றனர். சரணும், சிக்கண்ணாவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திலும், இந்த ஜோடி கை கோர்த்துள்ளது. உத்தரகண்ட், இலங்கை, மைசூரு, பெங்களூரு என, பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

* பஞ்ச பூதங்கள்

'அன்னய்யா' தொடர் மூலம், அடையாளம் காணப்பட்ட விகாஸ் உத்தய்யா, தற்போது நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். அபிஜித் தீர்த்தஹள்ளி இயக்கும் புதிய படத்தில், நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, அபாயவிதே எச்சரிக்கே என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. பஞ்ச பூதங்கள் அடிப்படையிலான கதை கொண்டதாகும். துணை இயக்குனராக பணியாற்றி, அனுபவம் பெற்ற விகாஸ் உத்தய்யா, இப்போது தனியாக படம் இயக்குகிறார். இவர் சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ், திரில்லிங் கதை கொண்டதாகும். படத்தில் நாயகியாக ராதா பகவதி, 'ராதா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

* நல்லது நடக்கட்டும்

நடிகர் உபேந்திரா இயக்கி நடிக்கும், யுஐ திரைப்படம் டிசம்பர் 20ல் திரைக்கு வரவுள்ளது. படக்குழுவினர் சமீபத்தில், வார்னர் என்ற பெயரில் படத்தின் டிரெய்லர் வெளியிட்டனர். இது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பாலிவுட் ஸ்டார் ஹீரோ அமீர் கானும் கூட, பாராட்டியுள்ளார். 'யுஐ படத்தின் டிரெய்லரை பார்த்து மிரண்டு போனேன். அற்புதமாக இருந்தது. இந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகும். ஹிந்தி மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும். உபேந்திராவுக்கு நல்லது நடக்கட்டும்' என வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us