உள்ளடக்கத்திற்கு செல்ல

பா.ஜ., அலுவலகம் வருகிறேன்; கைது செய்யுங்கள்: கெஜ்ரிவால்
பா.ஜ., அலுவலகம் வருகிறேன்; கைது செய்யுங்கள்: கெஜ்ரிவால்
ADDED : மே 18, 2024 05:15 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நாளை( மே 19) ஆம் ஆத்மி தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., அலுவலகம் வருவதாகவும், பிரதமர் மோடி யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது: ஆம் ஆத்மி தலைவர்களை சிறையில் அடைக்க பா.ஜ., விரும்புகிறது. ஜெயில் விளையாட்டை பா.ஜ., விளையாடி வருகிறது. நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மூத்த தலைவர்களுடன் பா.ஜ., தலைமை அலுவலகம் வருகிறேன். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறேன். யாரை வேண்டுமானாலும் நீங்கள் சிறையில் அடையுங்கள் என பிரதமரிடம் சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
