sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புல்லுமேடு சம்பவம்: இடைக்கால அறிக்கை தாக்கல்

/

புல்லுமேடு சம்பவம்: இடைக்கால அறிக்கை தாக்கல்

புல்லுமேடு சம்பவம்: இடைக்கால அறிக்கை தாக்கல்

புல்லுமேடு சம்பவம்: இடைக்கால அறிக்கை தாக்கல்


UPDATED : செப் 19, 2011 02:04 PM

ADDED : செப் 19, 2011 01:26 PM

Google News

UPDATED : செப் 19, 2011 02:04 PM ADDED : செப் 19, 2011 01:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: சபரிமலை,புல்லுமேடு சம்பவம் குறித்த நீதி விசாரணையின் இடைக்கால அறிக்கை முதல்வர் உம்மன்சாண்டியிடம் சமர்பிக்கப்பட்டது. ‌மொத்தம் 30-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் அந்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இதன் இறுதி விசாரணை அறிக்கை வரும் 30-ம் தேதி வெளியிடப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதியன்று சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்காக சென்ற அய்யப்ப பக்தர்கள் தரிசனம் முடித்துவி்ட்டு திரும்பிய போது புல்லுமேடு பகுதியில் நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 103 பேர் மூச்சுதிணறி பலியாயினர்.இந்த சம்பவம் அய்யப்பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஹரிஹரன்நாயர் தலைமையில் விரிவான விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஜூலை மாதம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார் ஹரிஹரன்நாயர், மூன்று முறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கை இன்று முதல்வர் உம்மன்சாண்டியிடம் அளிக்கப்பட்டது.இந்த அறிக்கையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த நடவடிக்கையை போலீசார் முன்கூட்டியே எடுக்காமல் இருந்தது , இது போன்ற சம்பவங்கள் என எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட 30 ஆலோசனைகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதி அறிக்கை வரும் 30-ம் தேதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் வி.எஸ். சிவக்குமார் கூறுகையில், அமைச்சரவைக்கூட்டத்தை கூட்டி இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என கூறினார்.






      Dinamalar
      Follow us