தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்

நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்

நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்


ADDED : டிச 19, 2024 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2024 10:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நேதாஜி நகர்:நகரில் பயன்படுத்தப்படாத சமூகநலக்கூடங்களை நுாலகங்களாக மாற்றும் நடவடிக்கையில் டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம் இறங்கியுள்ளது.

இதுகுறித்து டி.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:

நகரில் பல்வேறு சமூக நலக்கூடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை நுாலகங்களாகவும் வாசிப்பு மையங்களாகவும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ராஜேந்திர நகர், அதிசினி, விகாஸ்புரி, துவாரகா செக்டார்-16பி, ரோகிணி ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படாத ஐந்து சமூக நலக்கூடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன நுாலகமாகவும், வாசகசாலையாகவும் மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us