ADDED : மார் 07, 2024 03:48 AM

விஜயபுரா : லோக்சபா தேர்தலில் போட்டியா என்பதற்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பதில் அளித்துள்ளார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் விஜயபுரா தொகுதியில் இருந்து, நான் போட்டியிடவில்லை. பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, 28 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். அனைத்துத் தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெற வேண்டும். மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆக வேண்டும். இந்தியா உலகின் 3வது பொருளாதாரமாக மாறுவதை பார்க்க வேண்டும்.
கட்சியில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான். ஆனால் அதை மறந்து அனைவரும், ஒருங்கிணைந்து செயல்படுவோம். காங்கிரஸ் அரசின் தோல்வியால், மக்கள் அவதிப்படுகின்றனர். வாக்குறுதித் திட்டங்களின் பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்கு லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு தக்க பதிலடி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

