பசவராஜ் ஹொரட்டி மீது புகார் டி.ஜி.பி., எஸ்.பி.,க்கு சம்மன்
பசவராஜ் ஹொரட்டி மீது புகார் டி.ஜி.பி., எஸ்.பி.,க்கு சம்மன்
ADDED : டிச 07, 2024 11:09 PM
தார்வாட்: அறக்கட்டளையை சட்டவிரோதமாக நடத்தி வருவதாக, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மீது அளித்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாதது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு, தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடக சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி. தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தார்வாடில் வால்மீகி சமூகத்திற்காக 'சர்வோதய சிக் ஷா' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். இந்த அறக்கட்டளை சட்டவிரோதமாக செயல்படுகிறது.
பசவராஜ் ஹொரட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் அருண் என்பவர், கடந்த 2022 நவம்பரில் தார்வாட் டவுன் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரை, போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, டில்லியில் உள்ள தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தில் அருண் புகார் செய்தார்.
இந்த புகாரை, ஆணைய உறுப்பினர் ஐடோட்டு உசேன் என்பவர் விசாரித்து வருகிறார்.
வரும் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, கர்நாடக டி.ஜி.பி., அலோக் மோகன், தார்வாட் எஸ்.பி., கோபால் ஆகியோருக்கு, ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.