sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ரூ.200 கோடி சொத்தை மறைத்தார்: கேரள பா.ஜ., தலைவர் மீது புகார்

/

 ரூ.200 கோடி சொத்தை மறைத்தார்: கேரள பா.ஜ., தலைவர் மீது புகார்

 ரூ.200 கோடி சொத்தை மறைத்தார்: கேரள பா.ஜ., தலைவர் மீது புகார்

 ரூ.200 கோடி சொத்தை மறைத்தார்: கேரள பா.ஜ., தலைவர் மீது புகார்

1


ADDED : மார் 24, 2026 01:42 AM

Google News

ADDED : மார் 24, 2026 01:42 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம் : கேரள மாநில பா.ஜ., தலைவரும் நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் உள்ள 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்தை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.

கேரளாவில், ஏப்.,9ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தேர்தல் கமிஷனை ஏமாற்றும் வகையில், பா.ஜ., மாநில தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் செயல்பட்டதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு காங்., எழுதிய கடிதம்: ராஜீவ் சந்திரசேகருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் கோரமங்கலாவில், 49,000 சதுர அடியில் பிரமாண்ட பங்களா இருக்கிறது. அந்த நிலத்தின் மதிப்பு மட்டுமே 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

வேட்பு மனுத் தாக்கல் துவங்குவதற்கு முன், கடந்த 17ம் தேதி தான், அந்த சொத்துக்கான வரியை அவர் செலுத்தி இருக்கிறார்.

கடந்த தேர்தலின்போது, இதே விலாசத்தில் தான் வசித்து வருவதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த சட்டசபை தேர்தலில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்து விபரங்களை அவர் மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றம். எனவே, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் கடிதத்தில் கேரள பா.ஜ., முத்திரை


கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு, கடந்த 19ம் தேதி தேர்தல் கமிஷன் கடிதம் ஒன்றை எழுதியது. அத்துடன், இணைக்கப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில், தேர்தல் கமிஷனின் முத்திரைக்கு பதிலாக, மாநில பா.ஜ., முத்திரை இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது-. இது தொடர்பான விபரங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டள்ள கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 'இது முழுக்க முழுக்க எழுத்துப்பிழையால் ஏற்பட்ட அலுவலக தவறு; உடனடியாக சரி செய்யப்பட்டது' என, தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது.








      Dinamalar
      Follow us