ADDED : நவ 17, 2024 11:02 PM
மடிவாளா: இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக, வாலிபர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மடிவாளாவில் வசிப்பவர் நிகால் ஹூசைன், 28. இவருக்கும் 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் இந்த ஆண்டு மார்ச் மாதம் துவக்கத்தில், டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. மார்ச் மாத இறுதியில் ஒரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் இருவரும் சந்தித்தனர்.
இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை நிகால் கலந்து கொடுத்ததாகவும், மயங்கி விழுந்த இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நிகால் மீது மடிவாளா போலீஸ் நிலையத்தில் இளம்பெண் பலாத்கார புகார் செய்தார்.
நிகால் பலாத்காரம் செய்ததில் தான் கர்ப்பம் ஆனதாகவும், நிகால் கூறியதால் கர்ப்பத்தை கலைத்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் புகாரில் இளம்பெண் குறிப்பிட்டு இருந்தார்.
இதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
இதே இளம் பெண், கடந்த ஆண்டு இன்னொரு வாலிபர் மீதும் பலாத்கார புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.