ADDED : ஆக 21, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:பெங்களூரை சேர்ந்த பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தேஜஸ் கவுடா என்பவர், சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று, அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
புகாரில், 'தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலை பற்றி அவதுாறு ஏற்படுத்தும் வகையில் ஒரு சமூகத்தை சேர்ந்த யு - டியூபர், வீடியோ மூலம் அவதுாறு பரப்புகிறார். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த புகாரை தீவிரமாக எடுத்து கொண்டு, அவரது வெளிநாட்டு பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.