மதரீதியில் வாக்கு கேட்டதாக புகார்: பா.ஜ., வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.,
மதரீதியில் வாக்கு கேட்டதாக புகார்: பா.ஜ., வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.,
ADDED : ஏப் 27, 2024 01:44 AM

பெங்களூரு: கர்நாடகாவில் மதரீதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் பா.ஜ., வேட்பாளர் தேஜாஸ்வி சூர்யா மீது போலீசார் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்துள்ளனர்.
ஏழு கட்டங்களாக நடக்க உள்ள பார்லிமென்ட் லோக்சபாவிற்கு ஏப். 19-ல் முதற்கட்ட தேர்தல் நடந்தது. நேற்று இரண்டாம் கட்டமாக கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளராக தேஜஸ்வி சூர்யா போட்டியிடுகிறார்.
முன்னதாக தேஜாஸ்வி சூர்யா பிரசார வீடியோ ‛ எக்ஸ்' தளத்தில் வெளியிட்டார். அதில் பெங்களூரு தெற்கு தொகுதியில் 80சதவீத பா.ஜ.வினர், 20சதவீத காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக கூறினார். இவரது பிரசாரம் மதரீதியாக இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து தேஜஸ்வி சூர்யா மீது ஜெய்நகர் காவல் நிலைய போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.

