sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்னும் 6 மாதங்களில் மீண்டும் முழு அமைதி: உறுதி அளித்தார் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்

/

இன்னும் 6 மாதங்களில் மீண்டும் முழு அமைதி: உறுதி அளித்தார் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்

இன்னும் 6 மாதங்களில் மீண்டும் முழு அமைதி: உறுதி அளித்தார் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்

இன்னும் 6 மாதங்களில் மீண்டும் முழு அமைதி: உறுதி அளித்தார் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்


ADDED : ஏப் 19, 2025 09:44 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: 'அடுத்த 6 மாதங்களுக்குள் ஜம்மு பிராந்தியம் முழுமையான அமைதியை மீண்டும் பெறும்,' என்று ஜம்மு-காஷ்மீர் மாநில லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபகாலமாக பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. இளைஞர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது குறைந்துள்ளது.

இந்நிலையில்,இன்ற ஸ்ரீநகரில் வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சர்வதேச வலையமைப்பான YPO-Global One உறுப்பினர்களுடனான கூட்டம் நடைபெற்றது. இதில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பகுதியில், சமீப காலங்களில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அமைதி நிலைநாட்டப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஜம்மு-காஷ்மீர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தைக் கண்டுள்ளது.

இவ்வாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா பேசினார்.






      Dinamalar
      Follow us