பிரதமர் மோடி தலைமையில் இந்திய நலன்களுக்கு முழுமையான பாதுகாப்பு!
பிரதமர் மோடி தலைமையில் இந்திய நலன்களுக்கு முழுமையான பாதுகாப்பு!
ADDED : ஜூலை 10, 2025 04:51 PM

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்திய நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுதான்ஷூ திரிவேதி கூறினார்.
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா முக்கியமான சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன பா.ஜ., தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுதான்ஷூ திரிவேதி கூறியதாவது:
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தினார். இந்த அச்சுறுத்தலை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். மேலும் இந்தியா தனது ராணுவ, ராஜதந்திர மற்றும் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மீதான கூடுதல் வரி அச்சுறுத்தல் அமெரிக்காவின் உள் விவகாரம், வர்த்தக ஒப்பந்தத்திற்காக அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உலக நாடுகளுடனான இந்தியாவின் இணக்கம் புதிய உச்சங்களை எட்டியுள்ளது.
பல நாடுகள் மோடிக்கு அவர்களின் மிக உயர்ந்த கவுரவத்தை வழங்குவது இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமை மற்றும் அங்கீகாரத்தின் பிரகாசமான பிரதிபலிப்பாகும்.
இவ்வாறு சுதான்ஷூ திரிவேதி கூறினார்.