ADDED : பிப் 15, 2024 05:00 AM

பெங்களூரு, : எம்.எல்.ஏ.,க்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதற்கு சபாநாயகர் காதருக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத் பாராட்டு தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், வழக்கமாக 1-0:30 மணி அல்லது 11:00 மணிக்கு தான் துவங்கும். இம்முறை தினமும் காலை 9:45 மணிக்கு துவங்குகிறது.
எனவே, கூட்டத்துக்கு விரைவில் வர வேண்டும் என்பதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று சபாநாயகர் காதர் தெரிவித்திருந்தார்.
பெங்களூரு நகரின் பிரபல ஹோட்டல்களில் இருந்து, தினமும் சிற்றுண்டி கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
காங்., - ரங்கநாத்: சபாநாயகர் கொண்டு வரும் மாற்றங்கள் பாராட்டுக்குரியவை. அனைத்து உறுப்பினர்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு சட்டசபைக்கு வர வேண்டும் என்பதற்காக, சிற்றுண்டி வழங்குவதற்கு நன்றி. இதை நான் வரவேற்கிறேன்.
செயலர் மூலம், சட்டசபை அலுவலர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது.
சபாநாயகர் காதர்: அதெல்லாம் சரி, நீங்கள் சரியான நேரத்துக்கு சட்டசபைக்கு வந்தால் போதும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

