UPDATED : டிச 22, 2024 04:57 AM
ADDED : டிச 21, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் இசை சங்கத்தின், 82வது ஆண்டு விழா, பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. முனைவர் தேவகி முத்தையா துவக்கினார். தமிழ் இசை சங்க தலைவர் பேராசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
விழா துவக்கத்தில், பழையவண்ணை சோமுசுந்தரம், மயிலை செல்வம் குழுவினரின் நாதஸ்வரம் கச்சேரி நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், வேதாரண்யம் பாலசுப்ரமணியனுக்கு 'இசை பேரறிஞர்' விருது, பொற்பதக்கம், வெள்ளி பேழை மற்றும் 10 ஆயிரம் ரூபாய்; மயிலை நாகநாத தேசிகருக்கு, 'பண் இசைப்பேரறிஞர்' விருது, பொற்பதக்கம், வெள்ளிப்பேழை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.