கர்நாடகாவில் பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு கண்டனம்
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு கண்டனம்
UPDATED : ஜூன் 15, 2024 07:42 PM
ADDED : ஜூன் 15, 2024 07:37 PM

பெங்களூரு: கர்நாடகாவில் பெட்ரோல்,டீசல் விலையை அம்மாநில காங்., அரசு திடீரென உயர்த்தியுள்ளதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இன்று வெளியிட்ட அறிவிப்பில், கர்நாடகாவில் பெட்ரோலுக்கான விற்பனை வரி 25.92 சதவீதத்திலிருந்து 29.84 சதவீதமாகவும், டீசலுக்கான விற்பனை வரி 14.03 லிருந்து 18.04 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக பெட்ரேல் லிட்டர் ஒன்று ரூ.3 க்கும், டீசல் லிட்டர் ஒன்று ரூ. 3.02 க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு இன்று(16.06.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அம்மாநிலஅரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு அம்மாநில பா.ஜ,, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.