ADDED : டிச 11, 2024 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குகளில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையால் கைது கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, 17 மாதங்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கடந்த ஆக.,9ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நீதிமன்றம் விதித்த நிபந்தனைப்படி வாரத்திற்கு இரண்டு முறை விசாரணை அதிகாரி முன், சிசோடியா ஆஜராகி வந்தார்.
இந்நிலையில், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நேற்று விசாரித்த, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டனர்.

