தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம்!

எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம்!

எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம்!


ADDED : மார் 01, 2026 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 02:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ரா ஜ்யசபாவில், 37 எம்.பி., தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் துவங்கி விட்டது. வரும் 5 வரை தாக்கல் செய்யலாம். மாநில எம்.எல்.ஏ.,க்கள் கட்சியின் நிலைக்கு ஏற்றபடி ஓட்டளிப்பர். 9ல் ஓட்டுப்பதிவு.

மஹாராஷ்டிராவில் ஏழு எம்.பி., சீட்களுக்கான தேர்தல் நடக்கும். அங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை வைத்து பார்த்தால், 'இண்டி' கூட்டணிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' மட்டுமே கிடைக்கும்.

ஆனால், இந்த ஒரு சீட் யாருக்கு கிடைக்கும். உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., சரத் சந்திர பவார் என, இண்டி கூட்டணி கட்சிகள் அனைத்துமே, சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளன.

கடந்த 57 ஆண்டுகளாக அரசியலில் உள்ள, 85 வயது சரத் பவாருக்கு இந்த ராஜ்யசபா சீட்டை ஒதுக்க வேண்டும் என, அவருக்கு நெருக்கமானவர்களும், அவரது குடும்பத்தினரும் விரும்புகின்றனர். 288 எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய மஹாராஷ்டிரா சட்டசபையில், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்ந்தெடுக்க, 38 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுகள் தேவை.

உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான எம்.எல்.ஏ., வருண் சர்தேசாய், அவரது மகன் ஆதித்யாவிற்கும் நெருங்கிய நண்பர். 'இந்த ராஜ்யசபா எம்.பி., பதவி எங்களுக்குத் தான்' என, வருண் சர்தேசாய் சொல்லி இருக்கிறார். இதனால், இண்டி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி, எதிர்க்கட்சிக்கு கிடைக்க வேண்டிய ராஜ்யசபா எம்.பி., பதவியையும் தட்டிப்பறிக்க பா.ஜ., கூட்டணி முயற்சி செய்கிறதாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us