துவங்காத தேர்தல் ஏற்பாடு காங்., ஹரிபிரசாத் அதிருப்தி
துவங்காத தேர்தல் ஏற்பாடு காங்., ஹரிபிரசாத் அதிருப்தி
ADDED : மார் 08, 2024 02:14 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் துவங்கவில்லை,'' என்று, அக்கட்சியின் எம்.எல்.சி., ஹரிபிரசாத் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், வேட்பாளர்களை தேர்வு செய்வதில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மும்முரமாக உள்ளனர். தேர்தலுக்கான ஏற்பாடுகளை, இன்னும் துவங்கவில்லை.
துணை முதல்வர் சிவகுமார், கட்சியின் மாநில தலைவராக இருப்பதால், அவருக்கு பொறுப்பு அதிகம். கூடிய விரைவில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை துவங்குவர் என்று நம்புகிறேன்.
'ஓட்டுகள் எங்களுடையது. ராஜ்யம் உங்களுடையது' என்று, அமைச்சர் மஹாதேவப்பா கூறியதை ஆதரிக்கிறேன். அவர் தலித் சமூக மக்களின் தலைவர். மஹாதேவப்பா கூறியதை, கட்சி மேலிடம் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். பசவண்ணரை கலாசார தலைவர் ஆக்கி உள்ளோம். அவரது விருப்பப்படி தலித் சமூகத்தினருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

