கொள்ளையடிக்க தான் தெரியும் காங்., மீது பா.ஜ., - எம்.பி., பாய்ச்சல்
கொள்ளையடிக்க தான் தெரியும் காங்., மீது பா.ஜ., - எம்.பி., பாய்ச்சல்
ADDED : பிப் 04, 2024 11:20 PM

மைசூரு,: மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசை கண்டித்து புதுடில்லியில் காங்கிரசார் வரும் 7 ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர். அவர்களுக்கு அபிவிருத்தி செய்ய தெரியாது. கொள்ளை அடிக்க தான் தெரியும்.
கர்நாடகா பணக்கார மாநிலம். ஆனால், காங்கிரஸ் இங்கு ஆட்சி செய்கிறது. வாக்குறுதி திட்டங்களுக்கு பணம் பயன்படுத்துவதால், வளர்ச்சி பணிகளுக்கு நிதி இல்லை. எனவே மாநில மக்களின் கவனத்தை திசை திருப்ப, காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடகம் ஆடுகின்றனர்.
மத்திய அரசு, மக்கள் தொகை அடிப்படையில் வருமானத்தை பிரித்து பகிர்ந்து அளிக்கிறது. 14 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்களுக்கு இது குறித்த பொது அறிவு இருக்க வேண்டும்.
இதை நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. மாநில பட்ஜெட் தாக்கல் செய்பவருக்கு இது குறித்த குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும்.
அவர்களுக்கு அறிவு இருக்கிறது. ஆனால், அவர்கள் அறிவை பயன்படுத்த தவிர்க்கின்றனர். வட மாநிலங்கள் வளராமல் இருக்க முன்னாள் பிரதமர் நேரு தான் காரணம்.
இவ்வாறு அவர்கூறினார்.

