காங்., - எம்.எல்.ஏ., மீது பா.ஜ., - எம்.பி., புகார்
காங்., - எம்.எல்.ஏ., மீது பா.ஜ., - எம்.பி., புகார்
ADDED : பிப் 28, 2024 04:57 AM

பெங்களூரு : சமீபத்தில் சிக்கபல்லாபூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் அளித்த பேட்டியில், 'முதல்வர் சித்தராமையாவை பற்றி பேச, எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு தகுதியில்லை. வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையெனில், ஒட்டுமொத்த காங்கிரஸ் முகாமும் மைசூரில் இறங்க வேண்டியிருக்கும்' என்றதுடன், பிரதாப் சிம்ஹாவை ஒருமையிலும் பேசினார்.
இதை கண்டித்து, பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.
அதில், 'சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், ஊடகங்கள் முன்னிலையில் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். பொது வாழ்வில், என்னை பற்றிய தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார்.
'இது தொடர்பாக அவரின் பேட்டி அடங்கிய நாளிதழ்கள், வீடியோ ஆதாரங்கள் அடங்கிய பென்டிரைவ் ஆகியவற்றை சமர்ப்பித்து உள்ளேன். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார்.

