மத்திய அரசு மசோதாவுக்கு காங்., – எம்.எல்.ஏ., ஆதரவு
மத்திய அரசு மசோதாவுக்கு காங்., – எம்.எல்.ஏ., ஆதரவு
ADDED : செப் 18, 2026 08:12 PM
துமகூரு: ‘‘மத்திய அரசின் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தொகுதி மறுவரையறை நிறைவேற்றப்பட்டால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்,’’ என முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான ராஜண்ணா கூறி உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
எக்காரணம் கொண்டும் காங்கிரசிலிருந்து விலக மாட்டேன். காங்கிரசிலேயே இருப்பேன் என்ற மனநிலையில் உள்ளேன். வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த எனக்கு பொது தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கியது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, பலவீனமாகிறார் என்றால் கர்நாடக காங்கிரஸ் பலவீனமாவதாக பொருள். அஹிந்தா சமூக ஓட்டுகளை கவரும் திறன் அவருக்கு மட்டுமே உள்ளது. பா.ஜ.,வில் எடியூரப்பா, ம.ஜ.த.,வில் தேவகவுடா ஆகிய இருவர் மட்டுமே ஓட்டுகளை கவரும் திறனுடையவர்கள்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். மத்திய அரசு நினைத்தால் எந்த மசோதாவையும் நிறைவேற்றும். தொகுதி மறுவரையறை நடந்தால் மதுகிரி தனித்தொகுதியாக அறிவிக்கப்படும். அப்போது, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
