ஐதராபாத் மாநகராட்சியில் 100 வார்டுகளில் வெற்றி பெற காங்., இலக்கு
ஐதராபாத் மாநகராட்சியில் 100 வார்டுகளில் வெற்றி பெற காங்., இலக்கு
ADDED : செப் 23, 2024 12:09 PM

ஐ தராபாத்: தெலுங்கானா மாநில காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஹைதராபாத்தில் நடைபெற்றது. வருகை தந்த தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் - தெலுங்கானா மாநில பொறுப்பாளர் முன்னாள் எம்.பி., பெ.விஸ்வநாதன் வரவேற்றார்.
விழாவில் அகில இந்திய காங்., கமிட்டி பொது செயலாளர் தீபாதாஸ் முன்ஷி, தெலுங்கானா மாநில காங்., தலைவர் மகேஷ்குமார் கவுடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் விஷ்ணுநாத் , தெலுங்கானா மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் ஐதராபாத் மாநகராட்சியில் உள்ள 150 வார்டுகளில் 100 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதற்கென தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.