14 மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்களை நியமித்தது காங்கிரஸ்
14 மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்களை நியமித்தது காங்கிரஸ்
ADDED : மே 16, 2026 11:18 PM
புதுடில்லி: தலைநகர் டில்லியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, 14 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்கள் டில்லியின், 14 மாவட்டங்களிலும் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தல்படி, டில்லியின் 14 மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆதர்ஷ் நகர் - சித்தார்த் ராவ், சாந்தினி சவுக் - முஹமது உஸ்மான், கரவால் நகர் - மங்கேஷ் தியாகி, பாபர்பூர் - ராஜ் குமார் ஜெயின், பட்பர்கஞ்ச் - விஜேந்தர் சவுத்ரி, கிருஷ்ணா நகர் - சுமித் ஷ ர்மா, கரோல் பாக் - மகேந்தர் பாஸ்கர், புதுடில்லி - மொஹிந்தர் மங்லா.
ரோஹிணி - இந்திரஜீத் சிங், கிராரி - வருண் டாக்கா, திலக் நகர் - அமன்தீப் சிங் சுதன், நஜப்கர் - ராஜேஷ் யாதவ், மெஹ்ராலி - வீரேந்தர் சர்மா, பதர்பூர் - ஹர்ஷ் சவுத்ரி ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
