23 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் ரெடி?
23 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் ரெடி?
ADDED : பிப் 25, 2024 02:41 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 23 பேரின் பெயர் பட்டியல் தயாரித்து, துணை முதல்வர் சிவகுமார் கையில் வைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 20ல் வெல்ல, காங்கிரஸ் இலக்கு வைத்துள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டது. தொகுதி வாரியாக எம்.எல்.ஏ.,க்கள் கருத்துகளை சேகரித்து, வேட்பாளர் பட்டியலை அமைச்சர்கள் சமர்ப்பித்து உள்ளனர். அதன்படி 23 தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர் பட்டியல் தற்போது துணை முதல்வர் சிவகுமார் கையில் உள்ளது. இந்த பட்டியலுக்கு ஒப்புதல் பெற, காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பி வைக்க உள்ளார்.
பெலகாவியில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி அல்லது அவரது மகள் பிரியங்கா; சாம்ராஜ்நகரில் அமைச்சர் மஹாதேவப்பா அல்லது அவரது மகன் சுனிஸ் போஸ்; சிக்கோடியில் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியின் மகன் சிதானந்த் சவதி அல்லது எம்.எல்.ஏ., கணேஷ் ஹுக்கேரி; ஹாவேரியில் அமைச்சர் எச்.கே.பாட்டீல்; தட்சிண கன்னடாவில் சபாநாயகர் காதர் அல்லது மிதுன் ராய்; உத்தர கன்னடாவில் எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே.
மைசூரில் லட்சுமண் அல்லது சுஷ்ருத் கவுடா அல்லது யதீந்திரா; பல்லாரியில் சவுபர்ணிகா துக்காராம் அல்லது உக்ரப்பா; பெங்களூரு வடக்கில் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா; தாவணகெரேயில் அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவி பிரபா அல்லது வினய்குமார்; சித்ரதுர்காவில் ஆஞ்சநேயா; துமகூரில் முத்தஹனுமேகவுடா.
ஷிவமொகாவில் கீதா சிவராஜ்குமார்; உடுப்பி - சிக்கமகளூரில் ஜெயபிரகாஷ் ஹெக்டே; சிக்கபல்லாப்பூரில் ரக் ஷா ராமையா;
பெங்களூரு ரூரலில் சுரேஷ்; பெங்களூரு சென்ட்ரலில் அமைச்சர் ஜார்ஜ் அல்லது எம்.எல்.சி., ஹரிபிரசாத்; தார்வாடில் ஷிவலீலா;
விஜயபுராவில் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜு அழகூர்; பீதரில் சாகர் கன்ட்ரே; கோலாரில் கே.ஹெச்.முனியப்பா; ராய்ச்சூரில் பி.வி.நாயக்; மாண்டியாவில் ஸ்டார் சந்துரு ஆகியோர் பெயர் பட்டியலில் உள்ளதாக காங்., வட்டார தகவல்கள் கூறுகிறது.