கனவில் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது: அமித்ஷா ஆருடம்
கனவில் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது: அமித்ஷா ஆருடம்
ADDED : ஏப் 11, 2024 05:38 PM

போபால்: காங்கிரஸ் கட்சி கனவில் கூட ஆட்சிக்கு வர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மத்திய பிரதேசம் மாநிலம் மண்டிலா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று இன்றும் காங்கிரஸ் கேட்கிறது. உங்கள் கனவில் கூட நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எப்போதாவது மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 370வது சட்டப்பிரிவைத் தொட்டுவிடாதீர்கள்.
சர்ஜிக்கல் தாக்குதல்
நக்சலிசம் இல்லாத மத்தியப் பிரதேசத்தை மோடி உருவாக்கினார். காங்கிரஸ் ஆட்சியின் போது, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழைந்து குண்டுவெடிப்பு நடத்தினர். ஆனால் மன்மோகன் சிங் அதுபற்றி எதுவுமே சொன்னதில்லை. இந்தியாவில் உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு, 10 நாட்களுக்குள் நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கு சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தினோம்.
காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளாக ஜாதிவெறி, வாரிசு அரசியல் மற்றும் ஊழல் போன்றவற்றை வைத்து அரசியல் செய்துவந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் இவற்றையெல்லாம் ஒழிக்க பிரதமர் மோடி பாடுபட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

